Thursday, December 31, 2009

புதுப்பானை

மலர் தூவும் கருமேகங்களும்
மண்மணக்கும் தமிழினமும்
முடிவிலா காதல் முத்தங்களும்
முடிவுறா அல்ப ஆசைகளும்
கலப்பு மணங்களும்
விதவையும் விபச்சாரமும்
காறி உமிழும் வெறுப்பும்
குத்திக் கிழிக்கும் பகட்டும்
வளையா விறைக்கும் மொழியும்..
ம்......... ஊஹும்..!!
மற்றதொன்றும் தங்கவில்லை !!

Wednesday, December 23, 2009

பாற்கடலுக்கு வந்த கெணத்துத் தவள


"கவித எப்படி எளுதனுன்?
கத்து கொடுங்க சாமி"னு
கேட்டதோட நிக்காம
கடலக் கூடை தட்சணையா
வெச்சு அவர கும்பிட்டான்

தெகச்சு போன கவிராயர்:
"கள புடுங்கும் விஷயமில்ல கவித,
கம்ப்யூடர் வேலையில்ல,
தேனைக் கொடுக்கும் வேலை
கொளவியால ஆகாது
தேனியாக மாற எவனும்
கத்துக் கொடுக்க முடியாது"

Tuesday, December 8, 2009

OPINION

Soon after we meet a person, read a new book, encounter a new piece of art or just think about the universe anew, we tend to create opinions. Clouds of them which would surround the people and objects concerned, whenever we revisit them.